பூமி எனும் பூப்பந்துஅழகு அழகு இயற்கை அழகு
இயற்கை தரும் வாழ்க்கை அழகு
வாழ்க்கை வாழும் உள்ளம் அழகு
உள்ளம் உதிர்க்கும் எண்ணம் அழகு
எண்ணம் ஏற்றிய சொல்லும் அழகு
சொல்லால் சிறக்கும் செயலும் அழகு
செயலால் நிறைந்த மனிதர் அழகு
மனிதர் வாழும் இல்லம் அழகு
இல்லம் இயங்கும் ஊரும் அழகு
ஊர் உறையும் நகரம் அழகு
நகரம் நிறைந்த நாடும் அழகு
நாடுகள் இணைந்த பூமி அழகு
பூமி தந்த இயற்கை அழகு
அழகு அழகு இயற்கை அழகு
எண்ணம் பல; சொற்கள் பல;
செயல்கள் பல; வாழ்க்கை பல;
மனிதர் பல; ஊர்கள் பல;
நகரம் பல; நாடுகள் பல;
ஆனால்.....
இந்தப் பலதும் உறையும் பூமி ஒன்றே !
இவை யாவும் தரும் பூமி ஒன்றே !
இந்த மானுடம் வாழும் பூமி ஒன்றே !
இந்த மனிதம் உறையும் மையம் ஒன்றே !
கோடிக் கோள்கள்
கோட்டை கட்டி நின்றாலும் - இந்த
உயிர்கள் உறையும் பூமி ஒன்றே !
ஆதலினால், காதல் செய்வீர் ! - இந்த
பூமி எனும் பூப்பந்தை காதல் செய்வீர்!
சுற்றம் காப்போம்; உறவு வளர்ப்போம்.
புறச்சூழல் காப்போம்; உலகு வளர்ப்போம்.
எதிர்கால சந்ததி வாழ
ஏற்றமிகு சிந்தை செய்வோம்.
பூமி காப்போம்; பூமி காப்போம்;
பூக்கள் நிறைந்த பூமி காப்போம்.
பூமிப்பந்தை பூப்பந்தாக்குவோம்.

No comments:
Post a Comment